கோவை நகரில் சின்னப்பன் என்ற 50 வயதான கார் டிரைவர், நீண்ட காலமாக தனது வாடகை காரில் அமுதா என்ற ஒரு பெண்ணை தொடர்ந்து வாடிக்கையாளராக வைத்திருந்தார். அமுதா, ரத்தினபுரியில் வசிப்பவர். முக்கியமாக கோவை நகரில் உள்ள நகைக்கடைகளுக்கு சின்னப்பனின் காரை பயன்படுத்தி வந்துள்ளார்.
சின்னப்பன், அமுதாவின் நடப்பை நம்பி, தனது சேமிப்பில் இருந்து ரூ.12.41 லட்சத்தை நகை வாங்குவதற்காக அமுதாவிடம் கொடுத்தார். அமுதா, தனது தொடர்புகள் மூலம் ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறினார்.ஆனால், பல மாதங்கள் கடந்தும், சின்னப்பனுக்கு நகைகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் சந்தேகமடைந்தார். சின்னப்பன், நகைக்கடைகளில் விசாரித்ததில், அமுதா நகைகள் வாங்கவில்லை. மாறாக நகைப்பெட்டிகள் மட்டும் வாங்கி செல்வது தெரியவந்தது.
பணத்தை திரும்பக் கேட்ட சின்னப்பனுக்கு, அமுதா பல வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால் பணத்தையும், நகையையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சின்னப்பன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, அமுதா பலரிடமும் நகை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனால், போலீசார் அவரையும், அவருடன் தொடர்புடைய இமாம் கசாலி என்பவரையும் கைது செய்தனர்.
0 Comments