இன்றைய ராசிபலன் 09-10-2024
மேஷம் ராசிபலன்
உங்களது வாழ்க்கையில் சில விஷயங்கள் உங்கள் ஆற்றலையும், உற்சாகத்தையும் எடுத்துவிடுகின்றன. இன்று, நீங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு, அவைகள் உண்மையிலேயே போற்றுதலுக்குரியதாக இருக்கும். சில தருணங்களில், எல்லா பொறுப்புகளையும் வேறு யாருக்காவது ஒப்படைத்துவிடலாம் என விரும்பும் சூழ்நிலைகள் உள்ளன. அதை நீங்களே செய்யத் தயாராக இருக்கிறீர்களா என்றும், அல்லது யாராவது உங்களது பிரதிநிதித்துவதை முற்றிலும் எடுத்துவிடலாமா என்றும், நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
எந்த தவறான கருத்துகள் மூலமாகவும் உங்களைத் தூண்டி விடாதீர்கள். இது உங்கள் பொறுமையைச் சோதிப்பதற்காகவும் இருக்கலாம். நீங்கள் வெற்றி பெற வேண்டும். அர்ப்பணிப்புடன் இருப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல. ஆனால், அர்ப்பணிப்பை எந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை ஒருபோதும் சீரமைக்க வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள். வெற்றி பெறுவது மட்டுமே வெற்றியின் அளவுகோல் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். வெற்றிக்கான பாதையில் நீங்கள் பெறும் அனுபவங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மிதுனம் ராசிபலன்
உங்கள் மனதில் சில விஷயங்கள் உள்ளன. உங்கள் மனதில் உள்ளதை அடையும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். கவனம் செலுத்துவது நல்லது என்றாலும், உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்களையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ முழுமையாக கட்டுக்குள் வைத்திராமல் இழப்பது நல்லாலோசனை ஆகாது. இந்த நாள், உங்களுக்கு சமநிலையினைக் கொண்டதாக இருக்கும். உங்களது வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் நீங்கள் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் உடலைப் புறக்கணித்து வருகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் உடல்நலத்தை பாதிக்கிறது.
கடகம் ராசிபலன்
வேலைச் சுமை அதிகரித்து உள்ள நிலையில், எங்கிருந்து தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்கள் வேலைக்கும், வீட்டிற்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும், இல்லையெனில், இதனால் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று, நீங்கள் நினைப்பதை விட அதிகமாக பணியாற்ற வேண்டும். அறிவுடன் பேசி, அதன் மூலம் பயனுள்ள யோசனைகளைக் கண்டறியுங்கள். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான யோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
சிம்மம் ராசிபலன்
கடின உழைப்பு மிகுந்த பலனளிக்கும். எந்த நேரத்திலும் அதன் முடிவுகளை நீங்கள் காண்பீர்கள். உங்களை நீங்களே நிதானமாகப் மாற்றிக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதை நீங்கள் வரமாகவே பெற்றுள்ளீர்கள்! உங்களுக்குரிய பயணம் மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகள் விரைவில் அமையும். அதைச் செயல்படுத்த, சிறந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் மனதின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விடவேண்டாம். தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
கன்னி ராசிபலன்
உங்களது நிதிநிலை சீராக இல்லை. இந்த மாதத்திற்குள்ளாக நிலைமை சரியாகும் என்று நம்புகிறீர்கள். உங்களது பணம் செலவிடும் பழக்க வழக்கங்களைக் குறித்து கவனமாக இருங்கள். ஆடம்பரத்திற்கான உங்களது நாட்டத்திற்கு இன்று உகந்த நாளால்ல. பயனுள்ள பணிகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும், இன்று, தவறான தகவல்தொடர்புகள் அல்லது தவறான புரிதல்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்கள் நோக்கம் யாதெனில், சந்தேகங்கள் அல்லது அச்சங்கள் எப்போது, எப்படி ஏற்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துவதே ஆகும்.
துலாம் ராசிபலன்
உங்கள் நாள், ஆற்றல் மற்றும் நோக்கத்தில் எழுச்சியை உண்டாகும். உங்கள் செயலில் ஒரு உந்துதல் இருப்பதைச் சொல்லத் தேவையில்லை, நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் இது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். செய்யும் செயல்களில் முழுமையாகக் கவனம் செலுத்துவது, உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். எனவே, மன அழுத்த மேலாண்மை என்பது உங்கள் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தோன்றும் விரக்தியை விலகி விட்டு, பயனுள்ள ஏதாவது ஒன்றைச் செய்ய முயலவும்.
விருச்சிகம் ராசிபலன்
எப்போதும் நீங்கள் வேலையைப் பற்றியோ அல்லது விளையாட்டைப் பற்றியோ சிந்திப்பதில்தான் கவனம் செலுத்துகிறீர்கள். ஏதாவது ஒன்றை குறித்து மட்டுமே அதிதீவிரத்துடன் அணுகும் முறை ஆரோக்கியமான நடைமுறை அல்ல. மேலும், நீங்கள் உங்களது தற்போதைய வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதைக் கருத்தில் கொண்டு, அதை இன்னும் சமச்சீரானதாக மாற்ற வேண்டும். இன்றைய சூழலில், நீங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றிய உங்கள் மாறுபட்டக் கருத்தை கொண்டுள்ள போதோ அல்லது அதுபற்றி சந்தேகிக்கத் தொடங்கும் போதோ, நீங்கள் உங்கள் எண்ணங்களைப் போலவே வலிமையானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, இன்றைக்கே உடனடியாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பின்பு, அவற்றிற்காக வருத்தப்படுவதை விட, இப்போதே செய்யுங்கள்.
தனுசு ராசிபலன்
இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் கவனச்சிதறல்களால் உங்கள் பணி சற்று பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆகவே, அதைச் சரி செய்ய இன்று முதல் முயற்சி செய்யுங்கள். உண்மையில் எந்த செயலில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் பல திறமை வாய்ந்தவர் என்பது உண்மைதான் என்றாலும், உங்கள் வெற்றிக்கான தடைகளைக் கண்டுபிடித்து, அவற்றை மேம்படுத்த மட்டுமே உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிடுங்கள்.
மகரம் ராசிபலன்
நண்பர்களுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள். இன்று, உங்களை சற்று தளர்த்திக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதை அமைதியாக வைக்க உதவும். உங்களிடம் உள்ள கடன் அட்டைகள் மூலம் துணிச்சலாகப் பொருட்களை வாங்கிக் கொள்வது எளிதாகிவிட்டது. ஆனால், இவ்வாறு பொருட்களை வாங்குவது, உங்கள் வரவு செலவைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன் அட்டை அறிக்கை, உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு அதில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த பொறுப்பற்ற செலவு பழக்கத்தைத் தூண்டும் நபர்கள் அல்லது சூழ்நிலைகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவற்றிற்கு ‘இல்லை’ என்று சொல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.
கும்பம் ராசிபலன்
அறிவார்ந்த முறையில், கோபத்தையும், விரக்தியையும் நீங்கள் தோற்கடிக்க வேண்டும். நீங்கள் கோபத்தால் கொக்கரித்த ஒரு விஷயத்திற்க்காக வருத்தப்படலாம். ஒரு சிறிய மன்னிப்பு கோருதலான அணுகுமுறை உங்கது இன்றைய நாளை சரிசெய்ய உதவும். குறுகிய நேரத்தில், அதிக அளவிலான பொருட்களை வாங்கிக் குவிக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். மேலும், இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களுக்கு உண்மையிலேயே தேவையில்லாதப் பொருட்களை வாங்க காத்திருக்கிறீர்கள். இந்த நேரத்தில், உங்களுக்கு உண்மையில் இந்தப் பொருட்கள் தேவையா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
மீனம் ராசிபலன்
இன்று நீங்கள் என்ன பேசுகிறீர்கள் மற்றும் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனெனில், இது இன்று ஒரு சிலருக்கு லேசான மன வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும். உங்களுக்கு நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. அதில் சில விஷயங்கள் நல்லவை மற்றவை நல்லவை இல்லை. நீங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டிய நேரம் இதுவாகும். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.மெதுவாகச்சிந்தித்துச்சரியாகச்செயல்படுங்கள். ஏனெனில், உங்கள் நிதி சம்மந்தமான விஷயங்கள் பல தீயவர்களின் பார்வையில் பட வாய்ப்புள்ளது.
No comments