நடிகர் சங்கம் கூட்டத்திற்கு BMW சைக்கிளில் வந்த நடிகர் விஷால்.....
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதாவது ஹேமா கமிட்டி போன்ற தமிழ் சினிமாவில் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஆன மோதல் போக்கு குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கூட்டத்திற்கு நடிகர் விஷால் BMW சைக்கிளில் வந்துள்ளார்.
நடிகர் விஜய் தேர்தலில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் வந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஷால் சைக்கிளில் வாக்களிப்பதற்காக வந்தார். இதைத்தொடர்ந்து தற்போது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் அவர் சைக்கிளில் வந்துள்ளார். இதனைப் பார்த்த சிலர் விஜயை பார்த்து விஷால் காப்பியடிக்கிறார் என்று கூறுகிறார்கள். இருப்பினும் அவர் அண்ணா நகரில் இருந்து தேனாம்பேட்டைக்கு சைக்கிளில் வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விஷால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.,
மேலும் இதற்கு முன்னதாக அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் பாட்டு பாடிக் கொண்டே சைக்கிள் ஓட்டியது மிகவும் ட்ரெண்டானது. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலும் அதே போன்று சைக்கிள் ஓட்டிய வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
No comments