• Breaking News

    காரைக்கால்: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் நகராட்சி ஊழியர் பலி

     


    காரைக்கால் அருகே சொகுசு கார் இருசக்கர் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நகராட்சி ஊழியர் உயிரிழந்தார்.சென்னையை சேர்ந்த சாய்ராம் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.  திருப்பட்டினம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில்,இருசக்கர வாகனத்தில் பயணித்த நகராட்சி ஊழியர் அன்பு உயிரிழந்த நிலையில், சக ஊழியரான சந்திரசேகர் படுகாயமடைந்தார். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments