• Breaking News

    அறந்தாங்கி நகராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் நகர்மன்ற தலைவர் ஆனந்த் தலைமையில் துணைத் தலைவர் முத்து முன்னிலையில் நடைபெற்றது. கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல் பேருந்து நிலையம் வரை நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முழக்கமிட்டு பேரணியாக சென்று பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்தார்கள். 

    அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் ஆனந்த்,  துணைத் தலைவர் முத்து, கவுன்சிலர்கள் காசிநாதன்,  துளசிராமன், சிவபிரகாசம், அசாருதீன் ஆகியோர் நெகிழி பைகளை கொண்டு சென்ற பொதுமக்களிடம் அவைகளைப் பெற்றுக் கொண்டு  மஞ்சப்பைகளை கொடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து பிரச்சாரம் செய்தனர்.

     ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் செலக்சன் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய், அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் அப்துல் பாரி, செயலாளர் ஆண்டோ பிரவின், பொருளாளர் முனைவர் முபாரக் அலி, முன்னாள் தலைவர் விகாஸ் சரவணன், முன்னாள் செயலாளர்கள் கணேசன், இப்ராம்ஷா, முன்னாள் பொருளாளர்கள் பாப்பாத்தி, முருகேசன், டீலக்ஸ் கண்ணன், விஜயகுமார், செந்தமிழ் செல்வன், ஜேசிஐ அழகுதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    No comments