பன் போராட்டம் நடத்திய செல்வபெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரிடம், வணிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் நடந்து கொண்டது வருத்தமளிக்கிறது. அவர் என்ன பாதகம் செய்தார் என்ன தவறு செய்தார். குறைகள் இருந்தால் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் கூறுங்கள் என்று கூறினீர்கள். அதைத்தான் அவர் செய்தார்.
ஆனால் அவரை மன்னிப்பு கேட்க வைத்தது குற்றம். இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி இன்று செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோயம்புத்தூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் போது அவர்கள் பன் வாங்கி செலவழித்தனர். அதோடு தங்கள் கழுத்தில் அவர்கள் பன்னை மாலையாக அணிவித்திருந்தனர். அதில் ஜிஎஸ்டி 18 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
No comments