• Breaking News

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்


     புதுக்கோட்டையில்  இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு சுவாமிக்கு தீபாரதணை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்லில் உள்ள மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் திருக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள 32 அடி உயர விநாயகரின் முன்பு நந்தவன விநாயகர், புல்லட் ஓட்டும் விநாயகர், சிம்ம விநாயகர் உள்ளிட்ட 108 விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    சேலத்தில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அருகம்புல். எருக்கம்பூ உள்ளிட்டவை கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தனர்.  தங்க கவசத்தில் ஜொலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம், என் பாறைப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இப்பகுதியில் ஊர் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு கடலை பொரி படைத்து அபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தேவராட்டம் ஆடியும் சாமி தரிசனம் செய்தனர்.

    No comments