• Breaking News

    பாஜகவுக்கு பல அதிமுக தலைவர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள் - பெங்களூரு புகழேந்தி

     


    கிருஷ்ணகிரியில் நேற்று பெங்களூரு புகழேந்தி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தால் தொண்டர்கள் எங்களையும் சேர்ந்து துரத்தி துரத்தி அடிப்பார்கள். எனவே தொண்டர்களின் கருத்தை மதித்து பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். பாஜகவுக்கு பல அதிமுக தலைவர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள்.

    அதிமுகவினர் பார்க்காத பணமே இல்லை. அனைத்தையும் பார்த்து அனுபவித்து விட்டார்கள். கட்சியை காப்பாற்றுங்கள். பிரெஸ்டிஜ் பார்க்காதீர்கள். மேலும் இதையெல்லாம் உணர்ந்து பார்த்து அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை சந்தித்து சசிகலா பேச வேண்டும் என்று கூறினார்.

    No comments