ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட மாதா கோவில் இடிப்பு

 


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ராகவன் கால்வாய் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி நீதிபதி உத்திரவிட்டார். இலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது மாதா கோவில் ஒன்றையும் இடித்தனர். இதனால் 200க்கும் மேற்பட்டோர் மாதா கோவிலை இடிக்க கூடாது என போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பிற்காக போலீசார்கள் குவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாதா கோவில் எடுக்கப்பட்டது இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கண்ணீர் மல்க அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments