தவெக மாநாட்டில் ராகுல்காந்தி கலந்து கொள்கிறாரா....? அழைப்பு விடுத்தாரா விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 13ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அனுமதி கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறை தரப்பில் 23 கேள்விகள் கேட்கப்பட்டு ஒரு கடிதம் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மாநாடு நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் இருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
இந்நிலையில் விஜயதாரணி ராகுல் காந்தி கூறியதால் தான் விஜய் கட்சி ஆரம்பித்ததாகவும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜயின் முதல் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் எனவும் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்த தகவல்களில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ராகுல் காந்தி உட்பட முதல்வருக்கோ அல்லது வேறு யாருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments