ஒரே எண்ணில் நான்கு ஆம்னி பேருந்துகள் இயக்கம்..... பேருந்தை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர்.....
மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி வண்டியின் எண்ணில் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து வாகன காவல்துறை அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஆய்வாளர் விசாரித்த போது ஒரே எண்ணில் நான்கு ஆம்னி பேருந்து இயங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. வாகனத்தின் எண் “p.y.05.j 3485” வரதன் என்ற பெயரில் ஓடி உள்ளது.சாலை வரி செலுத்தாமல் இருப்பதற்காக இந்த செயலை செய்து உள்ளனர். இதைத் தொடர்ந்து ஆம்னியில் இருந்த பயணிகளை இறக்கி வேறு வண்டிக்கு மாற்றம் செய்துவிட்டு வண்டியை ஆய்வாளர் கைப்பற்றினார்.
மேலும் இது குறித்து ஓட்டுனரிடம் விசாரித்தபோது இந்த ஆம்னியின் உரிமையாளர் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என தெரியவந்துள்ளது. மேலும் ஒரே எண்ணில் நான்கு பேருந்துகளை இயக்கி அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல் இருந்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உள்ளதாக ஆய்வாளர் கூறியுள்ளார்.
No comments