சுயமரியாதை ரொம்ப முக்கியம்..... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை
தமிழ் சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது விலகலுக்கு காரணமாக, நிகழ்ச்சியில் மற்றொரு தொகுப்பாளரின் ஆதிக்கம் மற்றும் சுயமரியாதைக்கு எதிரான நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார்.மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நான் வேலை செய்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இல்லை.
இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் குக் என்பதையே மறந்து, தொகுப்பாளரின் வேலைகளை செய்ய விடாமல், நிறைய குறுக்கீடுகளை செய்கிறார். நமது உரிமைகளைக் கேட்பதும், கவலையை எழுப்புவதும் கூட இந்த சீசனில் குற்றமாகிவிடுகிறது. ஆனால் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அதற்கு நான் குரல் எழுப்புவேன். இந்த நிகழ்ச்சியின் உண்மைத்தன்மையை அந்த ஆதிக்கமும் எதிர்மறைகளும் கெடுத்துவிடுகிறது.
”மணிமேகலையின் இந்த திடீர் முடிவு, சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புகழ்பெற்ற நிகழ்ச்சியில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அல்லது மற்ற தொகுப்பாளர்கள் இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
No comments