திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இன்று நடைபெற்ற 36 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு செங்கம் பகுதியில் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் முக்கியமான வீதிகள் ஆன பெருமாள் கோவில்தெரு, சிவன் கோயில் தெரு, துர்க்கை அம்மன் கோவில் தெரு ,லைன் தெரு தல நாயக்கன் பேட்டை மற்றும் போளூர் சாலை வழியாக ஊர்வலமாக வந்தது.
இதில் ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பிரபாகரன் IPS தலைமையில் மற்றும் ADSP. P.பழனி முன்னிலையில் ADSP 2, DSP 6 மற்றும் ஆயுதப்படை இணைந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் விநாயகர் சிலைக்கு மற்றும் பொதுமக்களுக்கும் சிறப்பாக பாதுகாப்பு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சங்கம் செய்தியாளர் S சஞ்சீவ்
0 Comments