காதலனுடன் ஓட்டம் பிடிக்க தயாரான காதலி..... கடைசியில் நடந்த திருப்பம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நூற்பாறையில் தஞ்சாவூர் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனது தாயுடன் ஊருக்கு செல்வதற்காக கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இளம்பெண் ஏற முயன்றுள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய் தனது மகளின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடி உள்ளார்.உடனே அங்கிருந்தவர்கள் காரை வழிமுறைத்து காரில் வந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளைஞர்களில் ஒருவர் இளம்பெண்ணின் காதலன் என்பது தெரியவந்தது. பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தனது காதலனுடன் தப்பித்து சென்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
தொடர்ந்து வாலிபர்களுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அந்த இளம்பெண் தனது தாயுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளப்பெண்ணும் அவரது காதலனும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஓடி போய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது தெரியவந்துள்ளது.
No comments