• Breaking News

    பக்தர்கள் கடும் எதிர்ப்பு..... திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ்

     


    திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் பெறப்படுவதாக, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவம்பர் 2 -ஆம் தேதி முதல் நவம்பர் 9 -ஆம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால், விழா அன்று விரைவு தரிசனத்திற்கு வருகை தரும் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்வதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.  , இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடமிருந்தும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை ஆகியவற்றை வரவேற்பதாக தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், திருக்கோயிலின் இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், விரைவு தரிசன முறை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    No comments