டெலிகிராம் செயலியில் முக்கிய அம்சம் நீக்கம்

 


உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் telegram பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் சமீபத்தில் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது telegram செயலியில் சட்டவிரோதமான செயல்களுக்கு அனுமதி கொடுத்ததாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

 அதன் பின் விடுதலையானார்.இந்நிலையில் தற்போது telegram செயலியில் இருந்து ஒரு முக்கிய அம்சத்தை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. அதாவது தனிநபர் இருக்கும் லொகேஷனை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் ஆப்ஷனை telegram நீக்கி உள்ளது. மேலும் ஒருவர் இருக்கும் லொகேஷனை மற்றவருக்கு காட்டிக்கொடுக்கும் அப்டேட்டை நீக்கி பாதுகாப்பு அம்சத்தை அதிகப்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது பயனர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments