டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குங்கள்..... குடியரசு துணை தலைவரிடம் கோரிக்கை வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு கோரிக்கை வைத்தார்.
தொன்மையான தமிழை, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் படிக்கும் வகையில், கல்லூரிகளில் தமிழ் துறைகளை உருவாக்குமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். அப்போது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.இந்த சந்திப்பு தொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : குடியரசுத் துணைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பிற்கு நன்றி. அவரடன் உரையாடியது கற்றல் அனுபவமாக இருந்ததாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் கூறிளள்ளார்.
No comments