மயிலாடுதுறை: உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நெல் விதை மற்றும் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் நாகமங்கலம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நெல் விதை மற்றும் இடுப்பொருட்களை வழங்கினார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா,வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர்,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.விஷ்ணுபிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசரஸ்வதி,குத்தாலம் வட்டாட்சியர் சத்யபாமா,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஷோபனா,புவனேஷ்வரி, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன்,ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வைத்தியநாதன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
No comments