திருச்சி அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் கருப்பு அட்டை அணிந்து போராட்டம்

 

நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்தியா முழுவதும் கல்லூரி பேராசிரியர்கள் இன்று ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி 22 அரசு கலைக்கல்லூரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் கருப்பு அட்டை அணிந்து இன்று போராட்டம் நடத்தினர். 

போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மற்றும் அகில இந்திய பல்கலைகழக கல்லூரி ஆசிரியர் ௯ட்டமைப்பின் துணை தலைவருமான முனைவர் பி டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார்.

கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும்    நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் கோரிக்கை:

1. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

2. புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும். 

3. இந்தியா முழுவதும் அனைத்து பேராசிரியர்களுக்கும் ஒரே சரிசமமான 65 வயது என்ற ஓய்வு வயதை நிர்ணயிக்க வேண்டும்.

4.  கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பேராசிரியர் பணி மேம்பாடு வழங்கப்பட வேண்டும். 

5. இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு கட்டாயம் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்வு செய்ய வேண்டும்.

6.  புத்தாக்ம் மற்றும் புத்தொளி பயிற்சிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு அளித்த காலவரம்பு நீட்டிப்பை  தமிழ் நாட்டில்  நிறைவேற்ற வேண்டும். 

7. எம்.பில் மற்றும்   முனைவர் பட்டம் முடித்த பேராசிரியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

8.  மத்திய அரசு உடனடியாக எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும்

 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments