அருப்புக்கோட்டை டிஎஸ்பி மீது தாக்குதல்..... ஒருவர் கைது

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சாலை மறியல் போராட்டத்தின்போது, டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் காளிக்குமார். இவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காளிக்குமார் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மற்றும் போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து பெண் டிஎஸ்பி மீதான தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments