திருவள்ளூர்: டாக்டர் கணவரை தற்கொலைக்கு தூண்டிய டாக்டர் மனைவி


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கூனிபாளையத்தை சேர்ந்த மணிரத்தினம் தம்பதியரின் மகன் டாக்டர் பிரபாகர் என்கின்ற பார்த்தி. டாக்டர் பிரபாகரன் முகப்பேர் மேற்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.டாக்டர் பிரபாகருக்கும் முகப்பேர் மேற்கு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புற முகவரியில் வசிக்கும் தாமஸ் நிர்மலா ஆகியோரின் மகள்   விண்ணரசி என்கின்ற மைட்டிக்கும் கடந்த 20-09-2021 அன்று திருமணம் நடந்தது .இவர்களுக்கு தற்போது  நிவின் மகிழ் என்கின்ற தியோ(1 1/2) ஆண் குழந்தை உள்ளது.

திருமணம் ஆன நாள் முதலே வின்னரசி அவரது கணவரான டாக்டர் பிரபாகரனை பல்வேறு காரணங்களை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு அவரைப் பற்றி தகாத வார்த்தைகள் பேசி உள்ளார்.மேலும் டாக்டர் பார்த்திபனின் வருமானத்தில் எதையும் அவரது குடும்பத்தாருக்கு தரக்கூடாது என்றும், டாக்டர் பார்த்திபனின் வீட்டிற்கு செல்வதையும் தவிர்த்து வந்ததோடு, டாக்டர் பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தார்களை கிராமத்தில் வசிப்பவர்கள் என்று கூறி அவமதித்துள்ளார்.

மேலும் விண்ணரசி பார்த்திபன் உடன் அவரது வீட்டில் வசிக்காமல் அவரது தாய் வீட்டிலேயே பெரும்பாலான நாட்கள் தங்கி வந்துள்ளார். பார்த்திபன் அவராகவே சமைத்து சாப்பிட்டு வேலைக்கு சென்று வந்தார்.

பார்த்திபன் அவரது குழந்தையை பார்க்க அவரது மனைவியின் தாய் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் குழந்தையை பார்க்கவும் குழந்தையுடன் விளையாடவும் அனுமதிக்காததோடு, பார்த்திபனை அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் தகாத வார்த்தையில் அவமதித்து உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி டாக்டர் பிரபாகர் மீது அவரது மனைவி விண்ணரசி நொளம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பார்த்தியுடன் வாழ விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக கடந்த 30 ஆம் தேதி டாக்டர் பிரபாகர் மற்றும் அவரது குடும்பத்தார் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றுள்ளனர்.இந்த நிகழ்வு டாக்டர் பிரபாகரனை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

தொடர்ந்து டாக்டர் பார்த்தி அவரது மகன் தியோ, தம்பி மனோஜ்,  மற்றும் பெற்றோருக்கும்,  அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் 13 பக்கங்களில் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து ஒரு சிறந்த மருத்துவராக தான் சேவை செய்ய இருந்த கனவினை தனது மனைவி விண்ணரசி மற்றும் அவரது குடும்பத்தார் சிதைத்ததோடு இல்லாமல் , தனக்கு பாசமான குழந்தையோடு விளையாடவும் பேசும் கூட அனுமதிக்கவில்லை என்றும், கடந்த 2 வருடங்களாக தன்னை அவமரியாதையாக நடத்தியதோடு தனது குடும்பத்தாரையும் அவமரியாதையாக நடத்தியதாகவும் எழுதிவிட்டு விஷம் அருந்திவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆபத்தான நிலையில் இருந்து அவரை மீட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சார்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை டாக்டர் பிரபாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது மகனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு அவரை தற்கொலைக்கு தூண்டியதாக டாக்டர் பிரபாகரனின் மனைவி விண்ணரசி, அவரது மாமியார் நிர்மலா, மாமனார் தாமஸ், மற்றும் உறவினரான வழக்கறிஞர் ஐசக் சாமுவேல் ஆகிய நான்கு பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டாக்டர் பிரபாகரனின் தந்தை மணி அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் பிரபாகரனின் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments