நிதி பற்றாக்குறையால் உலக சாதனை தடைபெறும் சூழல், தமிழக மலையேற்ற வீராங்களை முத்தமிழ்செல்வி பேட்டி
சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி(34), ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இவர் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இவர் உலக அளவில் சாதனை புரிய திட்டமிட்டு 2023ம் ஆண்டு உலகில் உள்ள ஏழு கண்டங்களில் உயரமான மலைச்சிகரங்களில் ஏறி தனது சாதனை செய்திட வேண்டும் என்கிற பயணத்தை துவக்கினார்.
முதலிலேயே மிக கடுமையாக உலகில் அதிக உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை தமிழக முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிடோரின் நிதி உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து முதல் தமிழ்நாட்டு பெண் என்கிற சாதனையை அடைந்தார்.இது தொடர்பாக தமிழக அரசின் 2023ம் ஆண்டு துணிவு சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சரிடம் பெற்றார்.அதனை தொடர்ந்து ஐரோப்பா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலிய ஆகிய கண்டகளில் உயரமான சிகரங்களிலும் முதல் முயற்சியிலேயே தொடர் சாதனை புரிந்தார்.
இதற்காக அரசு மற்றும் பல தனியார்களும் நிதி உதவி வழங்கியதால் தான் சாதனை புரிய முடிந்தது என கூறும் முத்தமிழ் செல்வி அடுத்த சாதனையாக கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்ட்டிக்கா கண்டத்தில் மவுண்ட் வின்சன் மலைச் சிகரத்தை அடைய நிதி திரட்டி வருகிறார்.
64 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் விளையாட்டு துறை மூலம் 2 லட்சம் கிடைத்துள்ளது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மூலமாக அவரின் நிதி ஒருலட்சம் உள்ளிட்ட 4லட்சத்து55 ஆயிரம் நிதியை வழங்கப்பட்டது அதனை பெற்றுக்கொண்ட முத்தமிழ் செல்வி செய்தியாளர்களிடம்.பேசும்போது:-
குறைந்த காலத்தில் உலகில் ஏழு கண்டங்களை ஏறிசாதனை புரியும் 3 வது பெண்ணாகவும், இந்தியா வில் முதல் பெண் என்கிற சாதனையை மேற்கொள்ள எடுத்துள்ள முயற்சியில் 5 கண்ட சிகரங்களை உரிய நிதி அளிக்கப்பட்ட்ட நிலையில் சாத்தியாமனது, ஆனால் அண்டார்டிகா உள்ளிட்ட இரண்டு கண்ட சிகரங்களை அடைவதில் நிதி பற்றாகுறையால் தடை ஏற்படும் என்கிற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
மற்ற விளையாட்டு வீரகளுக்கு நிதி அளிப்பதுபோல் தமிழ்க பெண் மலையேற்ற வீராங்களையான தனக்கி நிதி கிடைத்தால் எவ்வளவு குளிர் கடுமையான சூழலிலும் சிகரங்களை அடைவேன் என தெரிவித்தார்.
No comments