டெல்லி பல்கலைகழக விடுதியில் தமிழக மாணவியின் சடலம்..... சிக்கிய பரபரப்பு கடிதம்
டெல்லி துவாரகாவில் இருக்கும் சட்ட பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் அமிர்தவர்ஷினி என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இவர் பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த மாணவியின் அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று மாணவி எழுதி வைத்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். அமிர்தவர்ஷினி பதற்றத்தில் இருந்ததாக சக மாணவிகள் கூறியுள்ளனர். ஏப்ரல் மாதம் அமிர்த வர்ஷினியின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு வாரத்திற்கு பின்பு மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
No comments