பொன்னேரி அருகே மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
கலைஞர் அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் க.சுந்தரம். ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் கழக துணை பொதுச்செயலாளர், உயர் மட்ட செயற்குழு உறுப்பினர், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார். அவருக்கு திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தும் வகையில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். க.சுந்தரத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சுந்தரத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, காந்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள், ஆவடி நாசர்.டி,.ஜெ ,கோவிந்தராஜன் துரை சந்திரசேகர் ,முன்னாள் எம்.எல்.ஏ சி எச் .சேகர், மாவட்ட துணை செயலாளர் கே. வி. ஜி. உமா மகேஸ்வரி. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாண்ணன். பொதுக்குழு உறுப்பினர் மேஸ்திரி சுப்பிரமணி. ஒன்றிய செயலாளர்கள். எம், எஸ் ,கே ரமேஷ் ராஜ், கா.சு ஜெகதீசன், கி வே ,ஆனந்தகுமார். செல்வசேகரன், நகர் செயலாளர்கள், ரவிக்குமார். ஆரணி, முத்து. அறிவழகன். மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ். துணைத்தலைவர் அலெக்சாண்டர். பூமிநாதன்.ஆகியோர் முதலமைச்சருடன் வந்து முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
No comments