• Breaking News

    மயிலாடுதுறை: பணி முடிந்து வீடு திரும்பிய டாஸ்மார்க் சூப்பர்வைசர் மீது மிளகாய் பொடி தூவி லேப்டாப் பறித்து சென்ற மர்ம கும்பல்


    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே, பஜனைமட தெருவில் தமிழக அரசின் டாஸ்மார்க் மதுபான கடை அமைந்துள்ளது. நேற்று இரவு கடையில் விற்பனை முடிந்து கடையின்  சூப்பர்வைசர் ரமேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சேந்தங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சேந்தங்குடி ஆர்ச் அருகே ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் குமார் மீது மிளகாய் பொடி தூவியது. 

    இதில் நிலை தடுமாறிய ரமேஷ் குமார் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். உடனடியாக அவர் கையில் இருந்த லேப்டாப் பையை அந்த கும்பல் பறித்துக் கொண்டு சென்றது. லேப்டாப் மற்றும் அதிலிருந்து ஆவணங்கள் பறிக்கப்பட்ட நிலையில் விற்பனை பணத்தை கடையில் லாக்கரில் வைத்து பூட்டியதால், பணம் கொள்ளை போகவில்லை. பல நாள் நோட்டமிட்டு இந்த கும்பல் வழிபறியில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி விசாரணை மேற்கொண்டார்.

    No comments