• Breaking News

    அறந்தாங்கி அருகே வேம்பு, அரச மரத்திற்கு திருக்கல்யாணம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசை எடுத்து வழிபாடு


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே அரசமரம், வேப்பமரம் தானாக தோன்றி உள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அரசமரம் சிவன் என்றும், வேப்பமரம் பார்வதி என்றும் அதற்கு திருக்கல்யாணம் நடத்துவதென முடிவு செய்து வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி சனிக்கிழமை கிராம பெண்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வதி பெண் வீட்டார் போன்று தலையில் பட்டு சேலை, பட்டு வேஷ்டி, பழங்கள், பாத்திரங்கள் உடன் மேளதாளங்கள் முழங்க சீர் வரிசையாக தலையில் சுமந்து கோவில் வந்தனர்.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி  வேப்பமரம்  மற்றும் அரசரமரத்திற்கு திருமணம் நிகழ்வு  நடைபெற்றது. வேப்பமரத்திற்கும், அரசமரத்திற்கும் நடைபெறுகின்ற திருமணத்தை பார்ப்பதற்காக சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     குறிப்பாக இந்த திருமணத்தை பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    No comments