செங்கத்தில் காட்சி பொருளாக மாறிய காவல் கண்காணிப்பு கேமரா


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத் நகர் ரவுண்டானா பகுதியில் பரமனந்தல், குப்பநத்தம் குயிலம் ,புதுப்பாளையம் காஞ்சி, காரப்பட்டு ,போளூர், போன்ற ஊர்களுக்கு செல்லும் மூன்று முனை கூடும் முக்கியமான சாலை யாகம் இந்தப் பகுதியில் காவல்துறையினரின் கண்காணிப்பு கேமரா மூன்றாம் கண் என்று சொல்லும் கேமரா பழுது அடைந்து ஆறு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.


 மேலும் அந்தப் பகுதியில் 3 வழி கூடும் சாலை ஏராளமான விபத்துக்கள் நடக்கிறது. அந்த விபத்து நடந்த வாகனங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் மிகச் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற பழுது அடைந்த கேமராக்கள் செங்கத்தில் பல இடத்தில் இருந்தும் இதுவரை காவல் துறையினர் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை என்றும் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். 

விரைவில் செங்கத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறைக்கு சொந்தமான டிராபிக் கேமராக்கள்  சரி செய்து காவலர்கள் பார்வையில் கொண்டு வர வேண்டும் என்று இதனால் பல்வேறு குற்ற செயல்கள் குறையும் என்றும் செங்கத்தில் உள்ள பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் எஸ்.சஞ்சீவ்

Post a Comment

0 Comments