காய்கறிகளை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கழுவும் வடக்கு வியாபாரி
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது தள்ளுவண்டியில் காய்கறிகளை கொண்டு செல்கின்றார். அப்போது அவர் சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் அழுக்கு நீரில் காய்கறிகளை கழுவியுள்ளார்.இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கிறார். இதனை மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அதனை நிறுத்தவில்லை, மீண்டும் மீண்டும் காய்கறிகளை அழுக்கு நீரில் கழுவியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.இதுபோன்ற சம்பவம் குறிப்பாக தெருவோர வியாபாரிகள் இடையே சுகாதார விழிப்புணர்வு இல்லை என்றும் கூறுகின்றனர்.
No comments