நம்பியூர் அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திமுக ஒன்றிய செயலாளரும், பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் கலந்து கொண்டு 90 மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் நடராஜன் செயலாளர் பழனிச்சாமி, அரசு வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் திமுக நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments