• Breaking News

    மண்டல நீச்சல் போட்டி- ஆர்.எம்.கே சீனியர் செகன்ட்ரி பள்ளி சாம்பியன்


    திருவள்ளூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டியில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. ரெசிடென்ஷியல் சீனியர் செகன்ட்ரி பள்ளி  ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

    திருவள்ளூர் மாவட்ட நீச்சல் மேம்பாட்டு மையம் சார்பில், மண்டல அளவிலான நீச்சல் போட்டி, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 7 முதல்19 வயதுடைய, 300 மாணவர்கள், 150 மாணவி யர்என மொத்தம் 450 பேர் இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்றனர்.

    மெட்லி, ரிலே, பட்டர்பிளை, பேக்ஸ்ரோக் என எட்டு வகையாக நடைபெற்ற நீச்சல் போட்டியானது வயது வாரியாக இரு பாலருக்கும் நடந்தன. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நீச்சல் போட்டியில் கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. ரெசிடென்ஷியல் சீனியர் செக்கண்டரி பள்ளி  தங்க பதக்கம் -22, வெள்ளி-21, வெண்கலம் -13 மொத்தம் -56 பக்கங்களுடன் 215 புள்ளிகளை  பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை  தட்டி சென்றது.

    தொடர்ந்து வென்ற பெற்ற பள்ளி நீச்சல் அணி மற்றும் ஒருங்கிணைப்பாளர் கற்பகாம்பிகை ஆகியோரை  ஆர்.எம்.கே. கல்வி குழும தாளாளர் ஆர்.எஸ்.முனிரத்தினம், பள்ளி முதல்வர் சப்னா சன்கலா, கல்வி குழும செயளாலர் திரு. எலமஞ்சி பிரதீப் வாழ்த்தி,  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.

    No comments