• Breaking News

    துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

     


    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுவரை இலங்கை சிறையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுவரை மீனவர்களை கைது மட்டுமே செய்து வந்த கடற்படையினர் தற்போது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதாவது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் படகை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதனால் பயந்து போன மீனவர்கள் அங்கிருந்து தப்பி வந்தனர். இதுவரை கைது நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்ட கடற்படையினர் தற்போது துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை விரட்டி அடித்தள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து அவர்கள் சித்திரவதை செய்ததாகவும் படகு ஒன்றுக்கு இலங்கை கடற்படையினரார் 1 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் புகார் கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

    No comments