விஜய் கட்சியின் மாநாடு நடக்குமா....? அனுமதி இல்லததால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை தரப்பில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம், விழுப்புரத்தில் 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த இடம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் இருப்பதால், மாநாட்டின் போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை கருதுகிறது. மேலும், இதேபோன்ற சம்பவம் முன்னர் தேமுதிக மாநாட்டின் போது நடந்ததையும் கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், தமிழக வெற்றிக் கழகம் மாற்று இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டின் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போடவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments