பொம்பள சோக்கு கேக்குதா.... பெண்களுக்கு தி கோட் படத்தின் டிக்கெட்டை இலவசமாக வழங்கிய நிர்வாகிகள்

 


இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுல் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரபுதேவா, அஜ்மல் அமீர், பிரஷாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் வருகிற 5-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில் தளபதி ரசிகர்கள் தி கோட் படத்தை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வெற்றி பெறுவதற்காக கும்பகோணத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் பெண்களுக்கு மட்டும் விஜயின் ரசிகர்கள் கோட் படத்திற்கான இலவச டிக்கெட்டை வழங்கினர். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் பெண்களுக்கு கோட்  படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments