கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளயம் ஊராட்சி குமரன்நாயக்கன் பேட்டையில் அதிமுக உறுப்பினர்கள் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பிலும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன் நாயக்கன்பேட்டை பகுதியில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை எனப்படும் உறுப்பினர்கள் உரிமை சீட்டு வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், அதிமுக மாவட்ட நிர்வாகி முல்லைவேந்தன், ஒன்றிய துணை செயலாளர் ஏ.டி.நாகராஜ் , ஒன்றிய பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், ஏழுமலை. கே.பி.ஆரோன், கும்மிடிப்பூண்டி பேரூர் அதிமுக செயலாளர் எஸ்.டி.டி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சிறுனியம் பலராமன் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்தும், தமிழக ஆளும்கட்சியின் போக்கு குறித்தும் பேசியதோடு, கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர்கள் உரிமை சீட்டை வழங்கினர்.இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் என்.சிவா, ஒன்றிய கவுன்சிலர் தேவி சங்கர், ஏ.ன்.குப்பம் ஊராட்சி தலைவர் அம்மு வினாயகம், கோபி இமச்சலம் ராஜா வீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments