• Breaking News

    தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்வு.....?

     


    தமிழகம் முழுவதும் நேற்று முதல் 25 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதன் எதிரொலியாக தற்போது ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிக்கெட் கட்டணங்கள் பயண தூரத்திற்கு 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாம். மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்யாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    No comments