• Breaking News

    மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை..... நடிகர் சூரியின் உணவகம் தான் காரணமா.....?


    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்பினர் மருத்துவமனை நோயாளிகளுக்கும், அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினருக்கும் உணவு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.அதேபோல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். 

    இந்நிலையில் தான் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு காரணங்களை கூறி உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அங்குள்ள குடும்பத்தினருக்கு உணவு வழங்க வந்த தன்னார்வலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது விதிகளை எடுத்து கூறி தன்னார்வலர்களை உணவு வழங்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் தன்னார்வலர்களின் உணவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.மேலும் அவர்கள் கடும் கோபமடைந்தனர். இதற்கிடையே தான் அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

    அதாவது, மருத்துவமனை அருகே நடிகர் சூரியின் அம்மன் உணவகம் உள்ளது. தன்னார்வலர்கள் வழங்கும் உணவால் இந்த உணவகத்தில் வியாபாரம் என்பது பாதிக்கப்படுகிறது. இதனால் அம்மன் உணவகத்தின் தலையிட்டால் தான் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டி உள்ளனர்.மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பொதுமக்கள் இந்த குற்றச்சாட்டை கூறி பரபரப்பை கிளப்பி உள்ளனர்.

    No comments