செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து,உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்....?
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கதவு எண் 58 ல் உள்ள சந்திரபாபு,மோகன், ஹரிதாஸ் ஆகியோருக்கு சொந்தமான அடுக்குமாடி காம்ப்லக்சில் அகரஉகுருபாதம் அவரது மனைவி ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 11ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் அங்கு ஹோட்டல், இயற்கை மருத்துவம், வாட்டர் ஃபில்டர் விற்பனை, ஆகியவற்றை நடத்தி வந்த நிலையில் காம்ப்லக்சின் உரிமையாளர் திடீரென அகரஉகுருபாதம் குடும்பத்தினரை காலி செய்ய சொல்லி கேட்டனர். அதற்கு அவர்கள் கால அவகாசம் கேட்டிருந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விசாரணையை நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் அவர்கள் விசாரித்தார். அதன்பிறகு காம்ப்ளக்ஸில் வாடகைக்கு கடை நடத்தி வரும் மலர் தேவி என்பவர் நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் துணையோடு சட்டவிரோதமாக அகரஉகுருபாதம் குடும்பத்தினரின் தொழில்களை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அகரஉகுருபாதம் குடும்பத்தினர்கள் அவரது மகள் 13 வயதே ஆன சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன் சுமார் 40 லட்சதிற்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை அவர்கள் கண்முன்னே லாரியில் ஏற்றி சென்றுள்ளனர்.
இது குறித்து பலமுறை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும், மேலும் நகரக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், வாடகையாளர் மலர் தேவி, லட்சுமணன்,காம்ப்ளக்ஸ் உரிமையாளர் மோகன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அகரஉகுருபாதம் குடும்பத்தினர் தங்களுக்கான நீதி வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
No comments