அரசு பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் முழுவதும் புயலை கிளப்பியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கட்டணம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை தற்போது போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இனி தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இனி பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனவும், துறையின் அனுமதி இல்லாமல் யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.அதோடு சுற்றரிக்கைகளை கூட சரியான முறையில் தயாரிக்காத சிஇஓக்கள் இருப்பதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 உறுதிமொழிகள் கொண்ட சுற்றரிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டது சர்ச்சையாக மாறிய நிலையில் அந்த அறிக்கையை மீண்டும் திரும்ப பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்களை ஊக்கப்படுத்தலாம் எனவும் வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
No comments