ஸ்ரீ நடேசன் வித்யாலயா பள்ளியில் பிரம்மாண்டமான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி அமைச்சர் எம்எல்ஏ பங்கேற்பு
வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் ஸ்ரீ நடேசன் வித்யாலயா பள்ளியில் பிரம்மாண்டமான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ நடேசன் வித்யாலயா பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளி நிறுவனர் முனைவர் ராமசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். ஐநா சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள், இந்திய அளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழ்நாட்டின் அபார சாதனை, தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி, தமிழகக்கோயில்கள், தமிழ்நாட்டு அகழ்வாராய்ச்சிகள், இந்திய அளவில் அகழ்வாராய்ச்சிகள், விண்வெளித் தொழில்நுட்பம், கரிபொருள் உலக அளவில் வெளியீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வித்துறையில் உலகமயமாதல், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகள் அரங்குகள், கலை, கைவினைப் பொருட்கள், சித்திரங்கள், செயற்கை நுண்ணறிவு, விஷயங்களில் இணையம், விளையாட்டு, ரோபோடிக்ஸ், வணிகம், பொருளாதாரம் எனப் பல்வேறு காட்சிப் பொருட்களை வைத்து மாணவர்கள் விளக்கங்களை அளித்தனர். இதில் பல கல்வி நிலைய மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர். மாணவர்கள் 12 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அவற்றை அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக இயல்பியல் துறைப் பேராசிரியர். முனைவர் ஜி.வி. விஜயராகவன் மதிப்பீடு செய்தார்.
கண்காட்சி நிறைவு விழாவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா கலந்துகொண்டு, பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி, ஐநா சபையின் நிலையான 17 வளர்ச்சி குறியீடுகள் பற்றி மாணவர்கள் எழுதிய நூலை வெளியிட, பள்ளித்தலைமை முதல்வர் முனைவர் காயத்ரி ராமச்சந்திரன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் ஆனந்தி மணி மற்றும் கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
No comments