• Breaking News

    தென்காசி: அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை



     தமிழகத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கூட வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்கள்.

     இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் அதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது சங்கரன் கோவில் அதிமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் வெளியப்பன். 

    இவர் இன்று காலை நடை பயிற்சிக்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவருடைய உடலை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments