• Breaking News

    மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி



    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. மாணவர்களிடையே விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்  நடைப்பெற்ற இந்த மாரத்தான் போட்டியினை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்த்து மாராத்தனை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து பச்சை நிற டீசார்ட் அணிந்து சுமார் 500 மாணவர்கள் மாராத்தான் போட்டியில் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ஈடாக ஆசிரியர்களும், மணவர்களுடன் இணைந்து மாராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.இந்த மாராத்தாம் போட்டி சேலையூர் பாரத் கல்லூரி அருகே தொடங்கி மாடம்பாக்கம் டிரீலிவ்ஸ் குளோபல் பள்ளி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைப்பெற்றது.இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி குழும தாளாளர் பரமேஸ்வரி பதக்கஙகளை அணிவித்து பாராட்டினார்.

    இறுதியாக சுற்று சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியர்கள் மரக்கன்றுகளை நட்டு பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    No comments