• Breaking News

    அறந்தாங்கி அருகே பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்


    புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத  அல்லறை கண்மாய் வரத்து வாரியை ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் உதவியோடு தூர் வாரும் பணியை தொடங்கிய ஆமாஞ்சி ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆமாஞ்சி ஊராட்சிக்குட்பட்ட அல்லறை மேலவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அப்பகுதி விவசாயிகள்  குண்டகவயல் மற்றும் துரையரசபுரம் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய அல்லறை கண்மாய் உள்ளது. 750 ஏக்கருக்கு மேலாக  இப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் இந்த குளத்தில் உள்ள நீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த குளத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீர் நிரம்பாமல்  உள்ளதால் விவசாயம் செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் பல  முறை ஊராட்சி மன்ற தலைவர்களை  சந்தித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த  ஒரு பயனும் இல்லை என கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஆமாஞ்சி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட ரவிச்சந்திரன் என்பவரிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கையின் அடிப்படையில் ஆமாஞ்சி  ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் பல தன்னார்வலர்களை நாடி ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில்  அல்லறை கண்மாய்க்கு வரும் வரத்து வரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

    எத்தனையோ பல ஊராட்சி மன்ற தலைவர்கள் குளத்தை தூர் வாருகிறோம் என்ற பெயரில் மண்ணை விற்று காசாக்க கூடிய சூழலில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு பிடி மண் கூட வெளியில் செல்லாமல் கரையை பலப்படுத்தி தூர்வாரும் பணியானது  நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments