தொடர் கனமழை..... வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு பெட்ரோல் பல்கிலும் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
குறிப்பாக வெங்கடய்யா பால்யம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள பொதுமக்கள் கைற்றைக் கட்டி ஆற்றைக் கடந்தனர். அப்போது ஒருவர் ஒரு கைகளால் கயிற்றைப் பிடித்து கடக்கும் போது ஆற்றுக்குள் அடித்து செல்லப்பட்டார். பின்பு ஆற்றின் நடுவில் உள்ள மரத்தின் கிளைகளைப் பிடித்து தொங்கிக் கொண்டார். அப்போது அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறினார். இதனைப் பார்த்த மக்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.
விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரப்பர் படத்தில் ஆய்வு செய்தார். அதேபோன்று தெலுங்கானாவிலும் திடீர் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் ஹீசைன் சாகர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டது. வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தெலுங்கானாவின் கம்மம், சூரியாப்பேட்டை ஆகிய இடங்களில் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கனமழையின் காரணமாக ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சுமார் 100 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு பணி அங்கு உள்ள மக்கள்களை வெள்ளத்திலிருந்து மீட்டு வருகிறார்கள்.
No comments