• Breaking News

    ஓரம்போ.... ஓரம்போ...... அமெரிக்காவில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     


    தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிம்முக்கு செல்வது, விளையாட்டு என தன் உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். அந்த வகையில் முதல்வர்  ஸ்டாலின் காலையில் சைக்கிளில் ரைடு சென்றுள்ளார். அவர் ஜாலியாக பாட்டு படித்துக் கொண்டே சைக்கிள் ஓட்டிய வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக நேற்று அவர் டிரைவர் இல்லாத காரில் பயணம் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது சைக்கிளில் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பொதுவாக பலரும் காரில் செல்வதையே விரும்பும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேசுவலாக சைக்கிளில் சென்றதோடு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

    No comments