தாயின் புகாரை ஏற்காத காவல்துறை..... ஆத்திரத்தில் அரசு அதிகாரி வாகனத்தை தீ வைத்து எரித்த வாலிபர்.....
கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிரித்திவிராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் காணாமல் போனதாக கூறி கடந்த ஜூலை மாதம் அவருடைய தாய் காவல் நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அவருடைய புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டிற்கு திரும்பிய பிரித்திவிராஜ் காவல்துறையினரிடம் தன் தாய் கொடுத்த புகார் பற்றி பேசுவதற்காக கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி சென்றார்.
இந்நிலையில் பிரித்திவிராஜ் நாடு ரோட்டில் வட்டாட்சியர் காரை தீ வைத்து எடுத்துள்ளார். அதாவது தன்னுடைய தாயின் புகாரை காவல்துறையினர் ஏற்காததால் ஆத்திரத்தில் வட்டாட்சியர் காரை நடுரோட்டில் தீ வைத்துக் கொளுத்திவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து பிரித்திவிராஜை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தொடர்பாகவும் பிரித்திவிராஜ் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாக.
No comments