திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தை ரகசியமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது.
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு அதிகாரிகள், ஆந்திர மற்றும் தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட காணொளி வாயிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், லட்டு விவகாரத்தில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து தயாராகும் உற்பத்தி பொருட்களான பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றை ரகசியமாக கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.
No comments