• Breaking News

    சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை..... பாஜக நிர்வாகி கைது

     


    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டம் சால் பகுதியில் 14 வயது சிறுமி ஆடு வைப்பதற்காக தனது சகோதரர்களுடன் சென்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பாஜக மண்டல தலைவரான பகவத்சிங் போரா என்பவர் அந்த சிறுமியை பார்த்துள்ளார். அவர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து தனியாக ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

    அவரிடம் இருந்து சிறுமி தப்பித்து வந்து தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பகவந்த் போராவை கைது செய்தனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைமை பகவந்த் போராவை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

    No comments