புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொன்ற அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதாவது இவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments