சீமான் மீது அவதூறு வழக்கு..... புதிய விசாரணை அதிகாரி நியமனம்.....
விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, பட்டியலின மக்கள் மீது அவதூறாகப் பேசியதாக சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை விரைவுபடுத்தும் பொருட்டு பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments