தாம்பரம் மாநகராட்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ், அடையாள அட்டை, துணையாளர் பேருந்து பயணத்தை, வீடு இல்லாதவர்கள் வீடு விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான பட்டா, UDID கார்டு மற்றும் பல்வேறு விண்ணப்பங்களை பெற்ற தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பாலாஜி அவர்கள் விண்ணப்பங்களை பெற்று கொண்டார்.பின்னர் அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உடனடியாக அடையாள அட்டை, வழங்கி UDID கார்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல் அவரிடம் படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக பாதுகாப்பாளர் உதவித்தொகை நேர்முகத் தேர்வுக்காக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அந்தந்த ஊரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தேர்வு முகாம் நடத்துவதற்கு பரிந்துரைக்காக பம்மல் அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் வெல்பேர் டிரஸ்ட் இயக்குனர் பம்மல் கவிதா அவர்கள் மனு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் டாக்டர் கதிர்வேல் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments